Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைத் துடைத்தொழிப்பதில் பின்னடைவு - ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -

உலக அளவில் பட்டினியால் தவிப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு கணிசமாய்  அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து அறிக்கை தெரிவித்துள்ளது.

நோய்ப்பரவல் காரணமாக அந்த எண்ணிக்கை கூடியிருந்த 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் அது அதிகம் என்று கூறப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாட்டைக் கையாள வகுக்கப்பட்ட உலகத் திட்டங்கள் பின்னடைவைச் சந்திப்பதாக நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு, 828 மில்லியன் பேர்-வரை மருத்துவ ரீதியாக ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலக மக்கள்தொகையில் அது சுமார் 10 விழுக்காடு. 

2020ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 46 மில்லியன் அதிகம் என்றும் 
2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 150 மில்லியன் அதிகம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.

பூசல்கள், மோசமான வானிலை, பொருளியல் சிக்கல்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றால், உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து நிலவரம் மோசமாகக்கூடும்.

2030ஆம் ஆண்டுக்குள் கடுமையான வறுமை, பட்டினி ஆகியவை முற்றிலும் முடிவுக்கு வரவேண்டும் என்று நிறுவன அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.

ஆனால் 2030ஆம் ஆண்டு முடிவுக்குள், உலக மக்கள்தொகையில் 8 விழுக்காட்டினர் பட்டினியை எதிர்நோக்குவர் என்று அறிக்கை முன்னுரைத்திருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்