X சமூக ஊடகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் - பரிசீலிக்கும் மஸ்க்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Reuters)
Twitter என முன்பு அழைக்கப்பட்ட சமூக ஊடகமான X-ஐப் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் விதிப்பதுபற்றிப் பரிசீலிப்பதாக அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் நடத்திய சந்திப்பின்போது அவர் அதனைத் தெரிவித்ததாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
Bots எனப்படும் தொந்தரவு தரும் தானியக்கச் செயல்முறையையும் பொய்க் கணக்குகளையும் எதிர்த்துப் போராட, X-ஐக் கட்டணச் சேவையாக மாற்றுவது ஒன்றே வழி எனத் திரு. மஸ்க் கூறினார்.
X-சேவையைப் பயன்படுத்துவோர் மிகச் சிறிய கட்டணத்தைச் செலுத்தக்கூடும் என்றார் அவர்.
இது திடீரென எடுக்கப்பட்ட முடிவா அல்லது உறுதியான திட்டங்கள் இருப்பதன் முன்னோட்டமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என BBC தெரிவித்தது.
X-ஊடகத்தை வாங்கியதுமுதலே அதன் சேவைகள் சிலவற்றுக்குக் கட்டணம் விதிப்பதுபற்றித் திரு. மஸ்க் பேசிவந்துள்ளார்.
கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்கள் நீண்ட பதிவுகளை இட அனுமதித்தல், அவர்களது பதிவுகளை அதிகமானோர் பார்வையிட வசதி செய்துதருதல் போன்றவை அத்தகைய சேவைகளில் சில.

ஆதாரம் : Others