Skip to main content
அவசரகால எண்ணெய் இருப்பு விற்பனைக்கு விடப்படுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அவசரகால எண்ணெய் இருப்பு விற்பனைக்கு விடப்படுமா?

வாசிப்புநேரம் -

G7 தொழில்வள நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் அவசரகால எண்ணெய் இருப்பை விற்பனைக்கு விடுவது குறித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஈரான் போரால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.

மூன்றரை ஆண்டில் காணாத விலை உச்சம் அது.

ஈரான் ஹொர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்கியுள்ளது அதற்கு முக்கியக் காரணம்.  

உலகின் 20% எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) அதன்வழி விநியோகிக்கப்படும் நிலையில் விநியோகத் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் ஏற்றுநடத்தும் காணொளிச் சந்திப்பில் G7 தலைவர்கள் போரின் பொருளாதாரப் பாதிப்பை ஆய்வுசெய்யவிருக்கின்றனர்.

G7 நாடுகளில் கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவையும் அடங்கும்.

எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அவசரகால எண்ணெய் இருப்பை விற்பனைக்கு விடலாமா என்பதை G7 தலைவர்கள் பரிசீலிக்கவுள்ளதாக Financial Times கூறுகிறது.

அனைத்துலக ஏரிசக்தி அமைப்பின்கீழ் நிர்வகிக்கப்படும் எண்ணெய் இருப்பில் 1.2 பில்லியன் பீப்பாய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்