Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கடல்வாழ் உயிரினங்களில் 10 விழுக்காடு அழிவின் விளிம்பில்...

வாசிப்புநேரம் -
கடல்வாழ் உயிரினங்களில் 10 விழுக்காடு அழிவின் விளிம்பில்...

(கோப்புப் படம்: AP Photo/Michael Dwyer)

கடல்வாழ் உயிரினங்களில் சுமார் 10 விழுக்காடு அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கையால் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலை அது வெளியிட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றம், தூய்மைக்கேடு, நீடித்து நிலைத்திருக்கமுடியாத மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாகக் கடற்பசுக்கள் எனப்படும் பாலூட்டி வகை விலங்குகள், அழிந்துபோகலாம் என்று ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்காப்பிரிக்கக் கண்டத்தில் அவற்றின் இருப்பிடங்கள், படிம எரிபொருள் உற்பத்தியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஆகவே கடற்பசுக்களின் தொகை 250க்கும் குறைவாக உள்ளது.

பல்லுயிரியல் தொடர்பான ஐக்கிய நாட்டு அமைப்பின் உச்சநிலை மாநாடு தற்போது கனடாவில் நடைபெறுகிறது.

இல்வேளையில் இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் சிவப்புப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres), விலங்குகளின் லாழ்விடம் அழிவதை நிறுத்தி, அவற்றைச் சரிகட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்