Skip to main content
எண்ணெய் வளாகங்கள் மீதான தாக்குதலால் வீசும் நச்சுக்காற்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எண்ணெய் வளாகங்கள் மீதான தாக்குதலால் வீசும் நச்சுக்காற்று

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கில் உள்ள எரிசக்திக் கட்டமைப்புகள்மீது நடத்தப்படும் தாக்குதல்களால் சுகாதாரப் பிரச்சினை எழுந்திருக்கிறது.

எண்ணெய்க் கிடங்குகளை இஸ்ரேல் தாக்கியதில் நச்சுவாயுக்கள் காற்றில் கலந்திருந்தன.

அதனால் இந்த வாரம் ஈரானில் அமில மழை பெய்தது.

அதன் நச்சுத்தன்மையால் கடும் சுகாதார ஆபத்துகள் ஏற்படலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

எண்ணெயுடன் கூடிய மழை பெய்ததாகக் கூறப்பட்டது.

எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதில் நேற்று தெஹ்ரானைக் கரும்புகை சூழ்ந்தது.

நச்சுவாயு கலந்த காற்றை சுவாசிக்கும்போது அல்லது துகள்களைத் தொடும்போது தலைவலி, தோல், கண்ணரிப்பு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் எழலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

நச்சுக்காற்றை அதிகக்காலம் சுவாசித்தால் சிலவகைப் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்