Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிர்ஷ்டக் குலுக்கில் $230 மில்லியன் வென்ற தம்பதி - "முதலில் நம்பமுடியவில்லை!"

வாசிப்புநேரம் -

இங்கிலாந்தில் திருமணமான தம்பதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

ஜோ - ஜெஸ் த்வெயிட் (Joe - Jess Thwaite) எனும் அத்தம்பதியர் EuroMillions அதிர்ஷ்டக் குலுக்கில் 230 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளனர்.

பிரிட்டனில் அவ்வளவு பெரிய தொகையை அதிர்ஷ்டக் குலுக்கலில் வென்றவர்கள் அவர்களே...

அது ஓர் அற்புதமான ஆனால் விசித்திரமான அனுபவம் என்று அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினர்.

முதலில் நம்பவே முடியவில்லை என்றும் ஒருவேளை ஏதாவது தவறு நடந்திருக்கக்கூடும் என்றும் எண்ணியதாக அந்தத் தம்பதி தெரிவித்தனர்.

அவர்கள் வெற்றிப் பணத்தை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்லப்போவதாகவும் அவர்கள் கூறினர்.

"நாங்கள் விடுமுறைக்குச் சென்றதே இல்லை. அதனால் எங்கள் பிள்ளைகளுக்கும் அதில் அதிக விருப்பம் உண்டு",

என்று 44 வயது ஜெஸ் (Jess) கூறினார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்