உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காண்பதற்கு வீட்டையே விற்கத் துணிந்த தீவிர ரசிகர்
கோப்புப்படம்: Carl Recine/AP
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தைக் காண வேண்டும் என்ற கனவு...
அதை நனவாக்க இங்கிலாந்தைச் சேர்ந்த தீவிர ரசிகர் தமது வீட்டையே விற்கத் தயாராக இருக்கிறார்.
62 வயது ஆண்டி மில்ன் (Andy Milne) ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்.
அவர் தற்போது தாய்லந்தில் வசிக்கிறார். அவருக்கு இரு நாடுகளிலும் வீடுகள் உள்ளன.
பிரிட்டனில் வைத்திருக்கும் வீட்டை அவர் வாடகைக்கு விடுகிறார். அந்த வீட்டை 350,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸுக்கு (சுமார் 600,000 வெள்ளி) விற்கப் பார்க்கிறார்.
முழு போட்டியையும் காண விரும்புவதால் நிறைய பணம் தேவைப்படுகிறது என்று அவர் பிரிட்டனின் The Mirror ஊடகத்திடம் கூறினார்.
திரு மில்ன் போட்டியைக் காண அமெரிக்காவுக்கு ஜூன் 3ஆம் தேதி செல்கிறார்.
குழுச்சுற்றில் இங்கிலாந்து குரோஷியா, கானா (Ghana), பனாமா (Panama) ஆகியவற்றுடன் போட்டியிடவிருக்கிறது.
அந்த ஆட்டங்கள் ஜூன் 17, 23, 27 தேதிகளில் நடைபெறும்.
தீவிர ரசிகரான திரு மில்ன் இங்கிலாந்தில் புகழ்பெற்றவர்.
இவ்வாண்டு அவர் 10ஆவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியைக் காணவிருக்கிறார்.
பொதுவாக அவர் போட்டியைக் காணச் செல்லும்போது வெற்றிக்கிண்ணத்தின் போலி வடிவத்தை வைத்திருப்பார்.