சாலையாக மாறிய கடல்
வாசிப்புநேரம் -
எஸ்தோனியாவில் (Estonia) 20 கிலோமீட்டர் கடல்பகுதி உறைந்ததில் அதனை மக்கள் சாலையாகப் பயன்படுத்துகின்றனர்.
சாரிமா (Saaremaa) ஹியயுமா (Hiiumaa) தீவுகளுக்கிடையே உறைந்துபோன கடல் பகுதி அமைந்துள்ளது.
அங்கு குளிர்கால வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 10 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பின்றி அப்பகுதியைச் சாலையாகப் பயன்படுத்துவதைக் கவனித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 9,000 பேர் மட்டும் வசிக்கும் ஹியயுமா தீவின் மக்கள் சாரிமா தீவின் கடைகளுக்குச் செல்லவும் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பவும் பயணம் செய்கின்றனர்.
எனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை (8 பிப்ரவரி) உறைந்த கடல் பகுதி வாகனமோட்டிகளுக்கு அதிகாரபூர்வமாகத் திறந்துவிட்டப்பட்டது என AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அந்தப் பனிச்சாலைக்கான பாதுகாப்பு கட்டுபாடுகள்:
🛣️ அதிகபட்சம் 2.5 டன் எடைமிகுந்த வாகனங்களை ஓட்டலாம்.
🛣️ மணிக்கு 20 கிலோமீட்டருக்கும் குறைவு அல்லது
மணிக்கு 40 முதல் அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.
🛣️ வாகனத்தை நிறுத்தக் கூடாது; மற்ற வாகனங்களிடமிருந்து பாதுகாப்பு இடைவெளி இருப்பது அவசியம்.
🛣️ ஓட்டுநர்களும் பயணிகளும் இருக்கை வார்ப்பட்டை அணியக்கூடாது. விபத்து ஏற்பட்டால் விரைவாக வெளியேற அந்தக் கட்டுபாடு.
போக்குவரத்து பாதுகாப்பாக இருக்க பனிச்சாலை ஏதுவாக உள்ளதா என்பதைத் தொடர்ந்து கவனிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆதாரம் : AP