Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"பலத்தைக் கொண்டு பணியவைக்க ரஷ்யா எண்ணுவதால் அதன் மீதான நெருக்குதலை அதிகரிக்கவேண்டும்"

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாமீது கூடுதல் தடைகளை விதித்துள்ளது.

உக்ரேன்மீது அன்றாடம் நடத்தப்படும் தாக்குதல்கள் அமைதி வழியில் செல்ல மாஸ்கோ விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக அது கூறியது.

அமைதியை எட்டுவது ரஷ்யாவின் இலக்கு அல்லவென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் குறிப்பிட்டார்.

பலத்தைக் கொண்டு பணியவைக்க ரஷ்யா எண்ணுவதால் அதன் மீதான நெருக்குதலை அதிகரிக்கவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய், எரிசக்தி ஆகியவற்றின் உற்பத்தியிலிருந்து மாஸ்கோவிற்குக் கிடைக்கும் வருமானத்தைக் குறைக்கும் வகையில் புதிய தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி ஒன்றியத்தின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

சண்டைநிறுத்தத்திற்கு ரஷ்யாவை இணங்கவைக்க அது முக்கியமான படி என்றார் அவர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்