Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலை மாநாடு - உக்ரேனியப் போர், உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேச்சு

வாசிப்புநேரம் -

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலை மாநாட்டில் உக்ரேனியப் போர், உணவுப் பாதுகாப்பு, நாடுகள் மீதான தடைகள் முதலிய விவகாரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

2 நாள் மாநாட்டில் ஐக்கிய நாட்டு நிறுவனமும் இணைந்துகொண்டுள்ளது.

ஒன்றியத்தின் தலைவர்களும் நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸும் (Antonio Guterres) உக்ரேனுக்குக் கூடுதல் பீரங்கிக் குண்டுகளை விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

உக்ரேனுக்கு இன்னும் கூடுதலான ராணுவ ஆயுதங்கள் வழங்கி ஆதரவு தெரிவிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயென் (Ursula von der Leyen) கூறினார்.

அடுத்த ஓராண்டுக்குள் 1 மில்லியன் தோட்டாக்களை வழங்க வெளியுறவு மன்றம் ஒப்புக்கொண்டதையும் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) இணையம்வழி கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தருவதில் தாமதித்தால் போர் மேலும் நீடிக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார். 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்