Skip to main content
அமெரிக்காவுடன் உறவைப் புதுப்பிக்க விரும்பும் ஐரோப்பா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவுடன் உறவைப் புதுப்பிக்க விரும்பும் ஐரோப்பா

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடன் உறவைப் புதுப்பிக்க விரும்பும் ஐரோப்பா
Kay Nietfeld / POOL/AFP

அமெரிக்காவுடன் உறவைப் புதுப்பிப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெர்மனியின் மியூனிக் (Munich) நகரில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் 60க்கும் அதிகமான தலைவர்கள் கூடியுள்ளனர்.

அமெரிக்காவுடன் புதிய பங்காளித்துவத்தை அமைக்கவேண்டும் என்று ஜெர்மனியின் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) சொன்னார்.

"நேட்டோ (NATO) கூட்டணியில் அங்கம் வகிப்பது ஐரோப்பாவுக்கு மட்டும் சாதகமாக அமையாது..அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும். அந்த நம்பிக்கையை மீண்டும் புதுப்பிப்போம்," என்றார் அவர்.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் மியூனிக்கில் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.

அண்மையில் கிரீன்லந்தைக் கைப்பற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்  மிரட்டல் விடுத்திருந்தார். 

அதைச் சாடிய ஐரோப்பிய நாடுகள் கிரீன்லந்தைப் பாதுகாக்க ராணுவத் துருப்புகளை அனுப்பியிருந்தன.

திரு டிரம்ப் பின்னர் தமது மிரட்டலை மீட்டுக்கொண்டார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்