Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குரங்கம்மைத் தடுப்பூசிகளைக் கூடுதலானோர் போட்டுக்கொள்ள வகைசெய்யும் நடைமுறை - பரிசீலிக்கும் ஐரோப்பா

வாசிப்புநேரம் -

குரங்கம்மைத் தடுப்பூசிகளைக் கூடுதலானோர் போட்டுக்கொள்ள வகைசெய்யும் நடைமுறையை  ஐரோப்பிய அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.

அமெரிக்கா அந்த நடைமுறையைத் தற்போது பின்பற்றி வருகிறது.

உலக அளவில் ஏறக்குறைய 27,800 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் ஓரினப் பாலியல் உறவில்  ஈடுபடும் ஆண்கள்.

12 மரணங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது Bavarian Nordic என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்து மட்டுமே குரங்கம்மைத் தொற்றைத் தடுக்கக்கூடியது என்ற அதிகாரத்துவ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அந்த மருந்து மிகக்குறைந்த அளவில் தயாரிக்கப்படுவதால் அதிகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடுகளுக்கே பெரும்பாலும் அது வழங்கப்படுகிறது.

அமெரிக்கா அந்த மருந்தை வழக்கத்தைவிடக் குறைவான அளவில் தோலில் செலுத்துகிறது.

முன்பு அந்தத் தடுப்புமருந்து தோலின் அடிப்பகுதிக்குள் செலுத்தப்பட்டது.

இளம்பிள்ளை வாதம், மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்குத் தோலின் மேற்பரப்பில்தான் தடுப்புமருந்து செலுத்தப்படுகிறது.

குரங்கம்மைக்கு இந்த முறை பயனளிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அது குறித்துக் கூடுதல் தகவல்களைத் திரட்டும் முயற்சியில் உலகச் சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்