Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய-உக்ரேன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும் - சீனாவிடம் ஐரோப்பிய ஒன்றியம்

வாசிப்புநேரம் -

ரஷ்யா, உக்ரேனில் மேற்கொண்ட போரை நிறுத்த அதற்கு நெருக்குதல் அளிக்குமாறு சீனாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. 

ரஷ்யாவிடம், அதன் படைகளை மீட்கும்படி சீனா கேட்டுக்கொள்ளவேண்டும் என்று ஒன்றியம் கூறியது. 

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் அங்கம் வகிக்கும் சீனாவிடம் அதனை எதிர்பார்ப்பதாகப் பெய்ச்சிங்கின் சிறப்புத் தூதர் லீ ஹுவெயிடம் ஒன்றியம் தெரிவித்தது. 

திரு. லீ மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தக் கருத்து அவரிடம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. 

உக்ரேனில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கில் அவர் ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளார். 

அந்தப் பயணத்தின் இறுதிக்கட்டமாக இன்று அவர் மாஸ்கோ சென்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் (Sergei Lavrov) பேச்சு நடத்தவிருக்கிறார். 

உக்ரேனியப் பூசலில் சீனா தன்னை நடுநிலையாளராகக் காட்டிக்கொள்ள முனையும் வேளையில் திரு. லீயின் பயணம் இடம்பெறுகிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்