ரத்தப் பிரிவா? உடல் மணமா? – கொசுக்கள் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் மர்மம் என்ன?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
கொசுக்கள் உங்களை மட்டும் அதிகம் கடிக்கிறதா? ஏன் என்று யோசித்ததுண்டா?
ஒரு நபரைவிட மற்றொரு நபரைத் தேர்ந்தெடுப்பதற்கு கொசுக்களின் உணர்வுகள் கொடுக்கும் அறிகுறிகள் (Sensory Cues) பங்காற்றுகின்றன.
மனிதர்களின் மணத்தை 10 மீட்டர் தொலைவிலிருந்தே கொசுக்களால் கண்டறிய முடியும். அவை நெருங்க நெருங்க குறிப்பிட்ட சிலரின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை கொசுக்களை அதிகம் ஈர்க்கும் என்பது நிபுணர்களின் கண்டுபிடிப்பு.
ரத்தப் பிரிவுகள் ஒரு காரணமா?
கொசுக்கள் குறிப்பிட்ட ரத்தப் பிரிவுகளை விரும்புகின்றன என்பதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை.
ஒருசில மனிதர்களைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவை சருமம், கண்கள், முடி ஆகியவற்றின் நிறங்களும் ஒரு பொருட்டல்ல என்று கூறுகின்றன.
மாறாக, நம் உடலிலிருந்து வெளியாகும் மணம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. மனிதர்கள் உடலிலிருந்து 300 முதல் 1,000 வரையிலான வெவ்வேறு நாற்றக் கலவைகளை (odorous compounds) வெளியிடுகின்றனர்.
ஆனால் இவற்றில் எது கொசுக்களை அதிகமாக ஈர்க்கிறது என்று தெரியவில்லை. அதை விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.
மதுபானம் அருந்துவோரை கொசு அதிகம் ஈர்க்குமா?
உடல் வெப்பநிலையை மதுபானம் உயர்த்துகிறது; சருமத்தின் மணம் மாறுகிறது; சுவாசத்திலிருந்து வெளியாகும் கரியமில வாயுவின் அளவும் அதிகரிக்கிறது.
மதுபானம் அருந்துபவர்களின் மணம் Anopheles வகை கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றன. அவ்வகை கொசுக்கள் மலேரியா நோயைப் பரப்பும் தன்மை கொண்டவை.
பருவநிலை மாற்றத்தால் கொசுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அவை ஏன் குறிப்பிட்ட மனிதர்களைக் கடிக்க விரும்புகின்றன என்பதைக் கண்டறிவது அவசியமாகிறது.
கொசுக்கள் நம்மைக் கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சருமத்தை மறைக்கும் தளர்வான ஆடைகளை அணியவேண்டும், கொசுவலைகள், கொசு மருந்து ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் அளவோடு சாப்பிட வேண்டும், மது அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆதாரம் : AFP