Jeju Air விமான விபத்து : விமானிகளின் கவனக்குறைவு காரணம்?
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Kim Soo-hyeon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Jeju Air விமானம் சென்ற டிசம்பர் மாதம் நொறுங்கி வெடித்த சம்பவத்தில், பறவை மோதியதில் குறைவாகச் சேதமடைந்த இயந்திரத்தை விமானிகள் அடைத்ததற்குத் தெளிவான ஆதாரம் கிடைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பறவை தாக்கிய பிறகு, வலப்பக்க இயந்திரத்திற்குப் பதிலாக, இடப்பக்க இயந்திரத்தை விமானிகள் அடைத்தனர்.
விமானி அறையின் குரல் பதிவு, கணினித் தரவுகள், சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் ஆகியவற்றின் மூலம் அது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
அது குறித்த அதிகாரத்துவ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
பறவை தாக்கி விபத்து ஏற்படுவதற்கு முன்னும் பின்னும், விமானத்திலிருந்து மீட்கப்பட்ட இயந்திரங்களில் சேதம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஓர் அரசாங்க அமைப்பு கூறியிருந்தது.

ஆதாரம் : Reuters