Skip to main content
ரோமானியக் கோட்டையில் இதுவரை கண்டிராத பெரிய காலணிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ரோமானியக் கோட்டையில் இதுவரை கண்டிராத பெரிய காலணிகள்

வாசிப்புநேரம் -
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள Magna Roman கோட்டையில் ஆகப்பெரிய காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை குறைந்தது 30 செண்டிமீட்டர் நீளமுள்ளவை என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அந்தக் காலணிகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அணியப்பட்டவை என்று கூறப்படுகிறது.

அண்மையில் அக்கோட்டையில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவற்றை யார் அணிந்திருப்பார்கள்? காலணிகள் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளன? எனப் பலருக்கும் பல கேள்விகள்....

பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய பாதங்கள் கொண்ட, உயரமானவர்கள் அவ்விடத்தில் தங்கியிருந்திருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் சொன்னார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்