நாள்பட்ட நரம்பு பாதிப்பு என்றால் என்ன?
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Nathan Howard
நேற்று (ஜூலை 17) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு (chronic venous insufficency) இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
நாள்பட்ட நரம்பு பாதிப்பு என்றால் என்ன?
கால்களிலுள்ள நரம்புகளால் இதயத்துக்கு ரத்தத்தைச் சரியாக அனுப்ப முடியாமல் போகும்.
இதனால் ரத்தம் பாதங்களில் சேர்ந்து வீக்கத்தை உண்டாக்கும்.
மூத்தோர், உடல் பருமன் அதிகமாக உள்ளோர், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்தப் பாதிப்பு நேர வாய்ப்புகள் அதிகம்.
நாள்பட்ட நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்?
கால்கள் சோர்வாக இருக்கலாம். நோய் மிகவும் மோசமாக இருந்தால் கால்களில் புண்கள் ஏற்படலாம்.
கால்களில் காப்பிலரிஸ் (capillaries) சிறிய நரம்புகள் உடைந்து ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
கால்களின் சருமம் வெடிக்கலாம். மேலும் கணுக்கால் சருமம் பழுப்பு நிறமாக மாறலாம்.
நாள்பட்ட நரம்பு பாதிப்பு உயிருக்கு ஆபத்தானதா?
உயிருக்கு ஆபத்தானது அல்ல, ஆனால் அதிகளவில் வலியும் உடல் ஊனமும் ஏற்படலாம் என்று ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் (Johns Hopkins Medicine) சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அதற்காகச் சிகிச்சை பெறாமலும் இருக்கக்கூடாது என்று வேறு சில நிபுணர்கள் கூறுகின்றனர். வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து மேலும் பல மருத்துவப் பிரச்னைகளை உண்டாக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
எவ்வளவு விரைவாக நாள்பட்ட நரம்பு பாதிப்பு மோசமாகும்?
நாள்பட்ட நரம்பு பாதிப்புக்கு 6 கட்டங்கள் உள்ளன.
ஆரம்பக் கட்டங்களில் சிறிதளவு மட்டுமே வலி இருக்கும். கடைசிக் கட்டத்தில் கால்களில் பல புண்கள் ஏற்படும்.
பெரும்பாலும் மூன்றாம் கட்டத்தில் நோயைக் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. அப்போது கால்களின் வீக்கம், சாதாரணமாகக் கண்களில் தென்படும் அளவுக்கு இருக்கும்.
நாள்பட்ட நரம்பு பாதிப்புக்கான சிகிச்சை
வலியையும் அழுத்தத்தையும் நீக்க சிகிச்சை உள்ளது. ஆயினும் நோயைக் குணப்படுத்த முடியாது.
கால்களை உயர்த்தி உடற்பயிற்சி செய்தால் நோயைச் சமாளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
காலுறைகளை (compression socks) அணிந்தாலும் நோயைச் சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் கால்களில் ஏற்படும் புண்களை நீக்கவும் மருந்துகள் வழங்கப்படலாம்.

ஆதாரம் : CNA