Skip to main content
வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் - ஏற்றுமதி செய்வது எளிதா?

வாசிப்புநேரம் -
வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் -  ஏற்றுமதி செய்வது எளிதா?
படம்: REUTERS/Issac Urrutia

வெனிசுவேலாவில் 306 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருக்கிறது.

அது உலகத்தின் ஆகப் பெரிய கச்சா எண்ணெய் இருப்பு.

இருப்பினும் பல்லாண்டுகளாக வெனிசுவேலா நாளொன்றுக்கு 1 மில்லியன் பீப்பாய்க்கும் குறைவாகவே எண்ணெயைத் தயாரித்து வந்தது.

வெனிசுவேலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சென்ற சனிக்கிழமை அமெரிக்க ராணுவம் கைது செய்தது.

பிறகு வெனிசுவேலாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவிருப்பதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

வெனிசுவேலாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வது எளிதானதா?

வெனிசுவேலாவில் இருக்கும் கச்சா எண்ணெயில் கசடுகள் உள்ளன. அவற்றைச் சுத்திகரிப்பது மிகவும் கடினம்.

ஏற்றுமதி செய்வதற்கு முன் எண்ணெயின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். அதற்குச் சிறப்பு இயந்திரங்களும் ரசாயனங்களும் தேவை.

தற்போது வெனிசுவேலாவில் உள்ள உற்பத்திக் கட்டமைப்பால் பெரிய அளவில் எண்ணெயை ஏற்றுமதிக்குத் தயார் செய்ய முடியவில்லை.

2005ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வெனிசுவேலாவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியதால் அந்நாட்டுக்கான முதலீடு குறைந்தது.

வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்திக் கட்டமைப்பு பலவீனமாய் இருப்பதால் அங்கு எண்ணெய் தயாரிப்பு திடீரென உயர வாய்ப்பு மிகவும் குறைவு.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்