Skip to main content
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த விரைவுப் பேருந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த விரைவுப் பேருந்து - 17 பேர் உயிர்தப்பினர்

வாசிப்புநேரம் -
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த விரைவுப் பேருந்து - 17 பேர் உயிர்தப்பினர்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Threads/@msyarif.n

மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் விரைவுப்பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது.

குழந்தை உட்பட 17 பயணிகள் உயிர்தப்பினர்.

விபத்து நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் நடந்தது.

பேருந்தில் தீ கொளுந்துவிட்டு எரியும் காட்சியைச் சமூக ஊடகக் காணொளியில் காண முடிகிறது.

அந்த இடத்தைக் கரும்புகை சூழ்ந்தது.

பேருந்து முழுக்க தீ பரவுவதற்குள் பயணிகள் அதிலிருந்து தப்பினர். யாருக்கும் காயம் இல்லை.

அவர்கள் கோலாலம்பூரிலிருந்து மலாக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக The Star ஊடகம் கூறியது.

தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்தில் பேருந்து சுமார் 70 விழுக்காடு சேதமடைந்ததாக மலாக்கா மாநிலத் தீயணைப்புத்துறை சொன்னது.

சாலையில் பேருந்து கருகிய நிலையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

விசாரணை நடைபெறுகிறது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்