Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாகும் பொய்யான படங்கள் - உலகெங்கும் குழப்பம்

வாசிப்புநேரம் -
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாகும் பொய்யான படங்கள் - உலகெங்கும் குழப்பம்

(படம்: AP/J David Ake)

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்படும் பொய்யான படங்கள், உலகெங்கும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தக் கூடுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் (Donald Trump) காவலர்கள் சிலர் பலவந்தமாகக் கைது செய்வது போன்ற பொய்யான படங்கள் அண்மை நாள்களாகப் பரவி வருவதை அவர்கள் சுட்டினர். 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது போன்ற பொய்யான படங்களும் பரவி வருகின்றன. 

உண்மையான படங்களைப் போலவே தோற்றமளிக்கும் நிழற்படங்களும் காணொளிகளும், உண்மை-பொய் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலைக் குறைப்பதாக நிபுணர்கள் கூறினர்.

உலகம் பிளவுபட்டுள்ள இன்றைய சூழலில், இத்தகைய திருத்தப்பட்ட படங்கள், சமூகக் குழப்பத்தை ஏற்படுத்துமென அவர்கள் குறிப்பிட்டனர். 

கிடைக்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை குறைந்து உலக நடைமுறைகள் மீது அவநம்பிக்கை உருவாகுவதற்கு இது வழிவிடலாம் என்றனர் நிபுணர்கள்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்