2022 இல் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த விளையாட்டு வீரர்கள்
வாசிப்புநேரம் -
COVID-19 கிருமிப்பரவலால் முடங்கிக் கிடந்த உலக விளையாட்டு அரங்கம் 2022 இல் மெல்லப் புத்துயிர் பெற்றது.
விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல வீரர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்.
அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு.
1. லயனல் மெஸ்ஸி (Lionel Messi)
விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல வீரர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்.
அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு.
1. லயனல் மெஸ்ஸி (Lionel Messi)
- 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்ட்டினா உலகக் கிண்ணத்தை வெல்லப் பங்காற்றியவர்களுள் முதன்மையானவர் மெஸ்ஸி.
- இதுவரை உலகக் கிண்ண இறுதியாட்டங்களில் ஆகச் சிறந்தது இந்த ஆண்டின் இறுதிபோட்டி. அர்ஜெண்டினா 4-2 என்ற பெனால்ட்டியில் பிரான்ஸை வீழ்த்தியது.
- உலகக் கிண்ணப் போட்டியில் 7 கோல்கள் அடித்ததுடன் 3 கோல்களுக்கு உதவிய மெஸ்ஸி 2ஆவது முறை தங்கப் பந்து விருது வென்றார்.
2. கீலியான் எம்பாப்பே (Kylian Mbappe)
- 2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த பெருமை எம்பாப்பேயைச் சேரும்
- அர்ஜெண்ட்டினாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் hat-trick அடித்தார் எம்பாப்பே.
- உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்த முதல் விளையாட்டாளர் அவர்.
- உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தம் 8 கோல்களைப் புகுத்திய அவர், FIFA தங்கக் காலணி விருது வென்றார்.
3. ரோஜர் ஃபெடரெர் (Roger Federer)
- சுவிட்சர்லந்து வீரர் ரோஜர் ஃபெடரெர் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார்.
- 41 வயது ஃபெடரெர், செப்டம்பர் 15ஆம் தேதி தமது சமூக ஊடகத்தில் அது பற்றி அறிவித்தார்.
- நீண்ட காலப் பிரச்சினையாக உள்ள முட்டுக் கால் காயமே டென்னிஸிலிருந்து தாம் ஓய்வுப்பெறக் காரணம் என்றார் ஃபெடரெர்.
4. நீரஜ் சோப்ரா
- "டைமண்ட் லீக்" (Diamond League) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவரைச் சேரும்.
- 2020 தோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறியும் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
- 2022 டைமன்ட் லீக்கிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
- ஈட்டி எறிதலில் அவர் பதிவுசெய்த தூரம் 88.44மீட்டர்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை Yahooவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டாளர் பேட்மிண்டன் வீரர் லோ கியென் இயூ (Loh Kean Yew).
- உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் World Tour Finals போட்டியில் அவர் முன்னேறத் தவறினார்.
- ஆனாலும் திறமையான ஆட்டங்கள் வாயிலாக உலக பேட்மிண்டன் தரவரிசையில் அவர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
- உலகத் தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் வந்த முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.