இந்திய, பங்களாதேஷ் விமான நிலையங்களில் குவியும் துணிகள்...
இந்தியா,பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளின் விமான நிலையங்களில் ஆடைகள் குவிந்து கிடக்கின்றன.
ஈரான் போரால் பல சரக்கு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வளைகுடா விமான நிறுவனங்களை நம்பியிருக்கும் தெற்காசிய நாடுகள் தங்களின் சரக்குகளை அனுப்பமுடியாமல் தவிக்கின்றன.
மத்திய கிழக்கு வட்டாரத்தின் வழி அனுப்பப்படும் சரக்கு...
இந்தியா - 41%
பங்களாதேஷ் - 50%க்கு மேல்
Zara, H&M, Primark போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றில்தான் ஆடைகளை அதிகம் தயாரிக்கின்றன.
Primark நிறுவனத்தை நிர்வகிக்கும் Sparrow Group, வழக்கமாகப் பங்களாதேஷிலிருந்து லண்டனுக்குத் துபாய் வழி ஆடைகளை வரவழைக்கும்.
துபாய் விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் Sparrow Groupஇன் சரக்குகள் பங்களாதேஷ் விமான நிலையத்திலேயே கிடக்கின்றன.
சரக்குகளை வேறு வழியில் தருவிக்கமுடியுமா என்பதை அது பரிசீலிக்கிறது.