உலகம் trending
ரயில் தண்டவாளத்தில் விழுந்த மகன்... உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
ரயில் நிலையத் தண்டவாளத்தில் விழுந்த மகன்...
நிலையத்திலிருந்து ரயில் கிளம்பியது...
தம் உயிரைப் பற்றிச் சிந்திக்காமல் தண்டவாளத்தில் இறங்கிய தந்தை மகனைக் காப்பாற்றினார்.
ஏப்ரல் 28ஆம் தேதி பங்களாதேஷில் நடந்தது.
தந்தையும் மகனும் ரயிலில் பயணம் செய்தவர்கள் என்று NDTV ஊடகம் தெரிவித்தது. நிலையத்தைவிட்டுப் புறப்பட்டபோது அவர்கள் ரயிலிலிருந்து இறங்கினர். அப்போது மகன் தண்டவாளத்தில் விழுந்தான்.
தந்தையும் உடனே கீழே குதித்து மகனைப் பாதுகாத்தார்.
பதைபதைக்க வைக்கும் அந்தச் சம்பவத்தை ஒருவர் காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அது தற்போது இணையத்தில் பரவுகிறது.
இணையவாசிகள் தந்தையைப் பாராட்டுகின்றனர்.
"இவரல்லவா தந்தை," என்று ஒருவர் பதிவிட்டார்.
"தந்தையின் அன்பு தன்னலமற்றது," என்று பலர் கூறினர்.