Skip to main content
2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள் - FIFA மறுபரிசீலனை

வாசிப்புநேரம் -

FIFA எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் 2030ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விலையை மறுபரிசீலனை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுப் போட்டிகளின் நுழைவுச்சீட்டு விலை குறித்து ரசிகர்கள் கொந்தளித்ததைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இந்த ஆண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இறுதிச்சுற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் மில்லியன் கணக்கான டாலருக்கு மறுவிற்பனை செய்யப்படுவதாகச் சிலர் குறைகூறினர்.

ஐரோப்பியக் காற்பந்து ரசிகர் மன்றம் நுழைவுச்சீட்டு விலை கொள்ளையடிப்பதற்குச் சமம் என்று சாடியுள்ளது. FIFAவுக்கு எதிராக வழக்கும் தொடுத்துள்ளது.

அதிகத் தேவை இருப்பதைக் கட்டணங்கள் பிரதிபலிப்பதாய் FIFA சொன்னது.

ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் விலை மாற்றம் செய்வது பற்றி ஆராய்வதாகவும் FIFA கூறியது.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்வழி 13 பில்லியன் டாலர் (சுமார் 16.5 பில்லியன் வெள்ளி) ஈட்டலாம் என்று FIFA எதிர்பார்க்கிறது.

உலகளவில் காற்பந்தை மேம்படுத்துவதற்கு அந்தத் தொகை முதலீடு செய்யப்படும் என்றும் அது தெரிவித்தது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்