காற்பந்து வீரர்களை இணையத்தில் பயமுறுத்துவது- கடுமையாகக் கையாளவிருக்கும் FIFA
(படம்:REUTERS/Arnd Wiegmann)
This audio is generated by an AI tool.
காற்பந்து வீரர்களையும் அதிகாரிகளையும் இணையத்தில் அச்சுறுத்துவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) அறிவித்தது.
தீமையான பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் அச்சுறுத்தலில் ஈடுபட்ட மேலும் அதிகமானோர் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் சம்மேளனம் கூறியது.
சம்மேளனத்தின் சமூக ஊடகப் பாதுகாப்புப் பிரிவு இவ்வாண்டு
30,000-க்கும் மேற்பட்ட அச்சுறுத்தும் பதிவுகளைக் கண்டறிந்துள்ளது.
அர்ஜென்ட்டினா, பிரேசில், பிரான்ஸ், போலந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 தனிநபர்கள் மீது புகார் அளித்திருப்பதாகச் சம்மேளனம் தெரிவித்தது.
தொடர்ந்து அச்சுறுத்தலில் ஈடுபடுவோருக்குக் காற்பந்துப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கத் தடை விதிக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.
"காற்பந்து அனைவரையும் உள்ளடக்கும் விளையாட்டாக இருக்கவேண்டும். அச்சுறுத்தலில் ஈடுபடுவோரை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டீனோ (Gianni Infantino) சொன்னார்.