Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்து - அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது போட்டிகளை ஏற்றுநடத்தும் கத்தார்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து -  அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது போட்டிகளை ஏற்றுநடத்தும் கத்தார்

(படம்: AP Photo/Petr Josek)

கத்தாரும் (Qatar) செனகலும் (Senegal) சந்தித்த ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் செனகல் வெற்றிகண்டது.

அதனைத் தொடர்ந்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது கத்தார்.

தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் கத்தார் தோல்வியைச் சந்தித்தது.

கத்தார் இவ்வாண்டின் உலகக் கின்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறும் முதல் அணி.

போட்டியை ஏற்றுநடத்தும் நாடுகளிடையே தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த முதல் அணியும் அதுவே.

இந்நிலையில், வேல்ஸுக்கும் (Wales) ஈரானுக்கும் (Iran) இடையே நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்களில் ஈரான் 2 கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது.

நெதர்லந்தும் (Netherlands) எக்குவடோரும் (Ecuador) பொருதிய ஆட்டத்தில் இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் அடித்து சமநிலை கண்டன.

இங்கிலாந்தும் (England) அமெரிக்காவும் (America) சந்தித்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்