Skip to main content
உலகக் கிண்ண இறுதிப்போட்டி உற்சாகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ண இறுதிப்போட்டி உற்சாகம் - தயாராகும் உணவகங்கள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண இறுதிப்போட்டி உற்சாகம் - தயாராகும் உணவகங்கள்

(படம்: TIMOTHY A. CLARY / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால் கடந்த ஒரு மாதமாக உணவகங்கள், பான விற்பனை நிலையங்கள் லாபம் பார்க்கின்றன.

சில நிறுவனங்களின் வருவாய் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

நாளை அதிகாலை நடைபெறும் இறுதிப்போட்டிக்காக ரசிகர்களை வரவேற்கப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதிப்போட்டியை முன்னிட்டுப் பல உணவகங்களில் ஊழியர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகின்றனர்.

கூடுதல் பணியாளர்களை நியமித்ததுடன் உணவு, பானங்களின் இருப்பு போதுமான அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளனர்.

இதனால் ரசிகர்களுக்குத் தேவையான சேவையைத் தடையின்றி வழங்கமுடியும்.

சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்துகின்றன.

அடுத்த உலகக் கிண்ணம் இன்னும் நான்காண்டுகளுக்குப் பிறகே நடைபெறவுள்ளதால் இந்த இறுதிப்போட்டியைச் சிறப்பாகக் கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

உணவகங்கள் மட்டுமல்லாமல் சுமார் 60 சமூக மன்றங்களும் ஒருங்கிணைந்த சமூக நடுவங்களும் ரசிகர்களுக்காகப் பெரிய திரைகள், சிறப்பு வசதிகளுடன் தயாராகியுள்ளன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்