காதல் துணை தேடி பின்லந்துக்கு இலவசப் பயணம்!
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
காதல் துணையைத் தேடும் 16 பேருக்கு இலவசமாக பின்லந்துக்குச் (Finland) செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Visit Finland எனும் பின்லந்தின் சுற்றுலா வாரியம் 'Finnish Dinner Date' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடம் பின்லந்தின் உணவு வகைகளைப் பிரபலப்படுத்துவது அதன் உண்மையான நோக்கம்.
ஆனால் அதன்மூலம் துணை ஒருவரைச் சந்திக்கமுடியும் என்பது நம்பிக்கை.
தேர்ந்தெடுக்கப்படும் 16 பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடையே நான்கு நாள் பயணம் மேற்கொள்வர்.
எட்டுப் பேர் ஹெல்சிங்கிக்கும் (Helsinki), மற்ற எட்டுப் பேர் டம்பெரே (Tampere) நகருக்கும் செல்வர்.
விமானப் பயணம், தங்குமிடம், உணவு, சுற்றுலா நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை Visit Finland ஏற்கும்.
உள்ளூர்வாசிகளுடன் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டு.
காதல் பிறக்குமா? உத்தரவாதம் கிடையாது என்று வாரியம் சொல்கிறது.
இருப்பினும் உணவு மூலம் மக்களை ஒன்றிணைப்பது பின்லந்துக் கலாசாரம் என்று வாரியம் கூறியது.
இலவசப் பயணத்தில் செல்ல விரும்புவோர் நவம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுவோர் டிசம்பர் முதல் தேதி அறிவிக்கப்படுவர்.