Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'பின்லந்தும், ஸ்வீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும்'

வாசிப்புநேரம் -
'பின்லந்தும், ஸ்வீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும்'

(படம்: AFP/Mandel Ngan)

பின்லந்தும் ஸ்வீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவ்விரு நாடுகளும் நேட்டோவில் சேர்வதைத் துருக்கி எதிர்க்கிறது. 

நேட்டோவில் உள்ள 30 நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால்தான் புதிய நாடுகள் அதில் சேரமுடியும். 

பின்லந்தும் ஸ்வீடனும் குர்தியத் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கிவருவதாகத் துருக்கி குற்றஞ்சாட்டுகிறது. 

பின்லந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் சேர்வதை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது. 

அவ்விரு நாட்டுத் தலைவர்களையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் சத்தித்துத் தமது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

பின்லந்துக்கும் ஸ்வீடனுக்கும் நேட்டோவில் சேர்வதற்கான எல்லாத் தகுதியும் இருப்பதாகத் திரு. பைடன் சொன்னார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்