Skip to main content
துபாயில் வானூர்தித் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துபாயில் வானூர்தித் தாக்குதல் - அமெரிக்கத் தூதரகக் கார் நிறுத்துமிடம் தீப்பற்றியது

வாசிப்புநேரம் -
துபாயில் வானூர்தித் தாக்குதல் - அமெரிக்கத் தூதரகக் கார் நிறுத்துமிடம் தீப்பற்றியது
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்டப் படம்: Video Obtained By Reuters/via REUTERS)
துபாயில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு அருகே ஈரான் வானூர்தித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கார் நிறுத்துமிடத்தில் பற்றியெரிந்த நெருப்பை அணைத்துவிட்டதாகத் துபாய் அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) துபாயில் உள்ள துணைத் தூதரகத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் சொன்னார்.

துபாயின் நெரிசல் மிகுந்த வட்டாரத்தில் அமெரிக்கத் துணைத் தூதரகம் உள்ளது. அதன் அருகே பிரிட்டன், சவுதி அரேபியா ஆகியவற்றின் தூதரகங்களும் அமைந்துள்ளன.

அமெரிக்கத் தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் பயங்கரவாதக் குழுக்களால் நேரடியாகத் தாக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்