Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கொரியாவில் தேசியப் பொக்கிஷங்கள் இருக்கும் கட்டடத்தில் தீ

வாசிப்புநேரம் -
தென்கொரியாவில் தேசியப் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது. கட்டடம், சோலிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க Jogye புத்தர் கோவிலுக்கு அருகில் உள்ளது.

தீயினால் கட்டடத்திலுள்ள பொருள்களுக்குச் சேதமில்லை. யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீப் பரவியபோது கோவிலிலிருந்த 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

30க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

தீ மூண்ட இடத்திலிருந்து பரவும் புகையால் பொருள்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றுள் சில தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றன.

தீக்கான காரணம் ஆராயப்படுகிறது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்