உலகம் trending
தாயைத் திருமணத்துக்கு அழைக்காத ஊழியர் பணிநீக்கம்!
வாசிப்புநேரம் -
(படம்: unsplash)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
திருமணத்துக்குத் தாயை அழைக்காத ஊழியரை வேலையைவிட்டு நீக்கிய முதலாளியின் செயல் சீனாவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குய் பெய்ஜுன் (Cui Peijun), தமது நிறுவனத்தின் நிகழ்ச்சியில் அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
குய் மிகவும் பெருந்தன்மையான முதலாளி என பெயர் பெற்றவர். ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைகளை அள்ளிக் கொடுப்பவர் என்று South China Morning Post நாளேடு கூறியது.
"பெற்றோரை மதிப்பதே நல்ல மனிதராக இருப்பதற்கு அடிப்படை," என்று அவர் கூறினார்.
தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததால் தாய்தான் அந்த ஊழியரை வளர்த்ததாக குய் தெரிவித்தார்.
ஆனால் தனது தாயின் தோற்றத்தைக் கண்டு வெட்கப்பட்ட அந்த ஊழியர் திருமணத்துக்கு அவரை அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அதை அறிந்ததும் அந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்ததாக குய் தெரிவித்தார்.
வேறு வேலை கிடைக்காததால் அந்த ஊழியர் மன்னிப்புக் கேட்டார். இருந்தபோதும் அவரை மீண்டும் பணியில் சேர்க்க குய் மறுத்துவிட்டார்.
இணையவாசிகள் பலர் குய்யின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
"பெற்றோரை மதிக்காதவர், மற்றவர்களிடமும் உண்மையாக அன்பு செலுத்த மாட்டார்," என்று ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ஊழியரின் தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளி தலையிடக்கூடாது என்றும் அது தொழிலாளர் உரிமைகளை மீறியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.

ஆதாரம் : South China Morning Post