Skip to main content
முதல் தொகுதி பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

முதல் தொகுதி பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை

வாசிப்புநேரம் -
முதல் தொகுதி பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை

படம்: AFP/Hazem Bader

முதல் தொகுதி பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை ஏற்றியிருந்த முதல் பேருந்து காஸாவைச் சென்றடைந்துள்ளது.

மொத்தம் 38 பேருந்துகளில் பாலஸ்தீனர்கள் உள்ளனர்.

ஜெருசலம் அருகிலுள்ள ஒஃபெர் (Ofer) ராணுவச் சிறைச்சாலையிலும் நெகெவ் பாலைவனத்திலுள்ள கெட்ஸியோட் (Ketziot) ராணுவச் சிறைச்சாலையிலும் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்கத் தயாராவதாக இஸ்ரேலின் சிறைச்சாலைச் சேவை முன்னதாகத் தெரிவித்தது.

போரின்போது காஸாவில் பிடிபட்டவர்கள் காஸாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்.

குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்ட 250 பாலஸ்தீனர்களில் சிலர் ஜெருசலம், மேற்குக் கரை அல்லது காஸாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். பெரும்பாலோர் காஸாவுக்கு அனுப்பப்படுவர் அல்லது நாடு கடத்தப்படுவர்.

ஒஃபெர் சிறைச்சாலைக்கு அருகிலிருக்கும் மலைகளில் பாலஸ்தீனர்கள் திரண்டுள்ளனர். கைதிகள் விடுதலை செய்யப்படுவதைக் காணவும் தங்களின் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மீண்டும் இணையவும் அவர்கள் அங்கு திரண்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. சண்டைநிறுத்தம் அமைதிக்கு வழியமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர்கள் கூறினர்.

பாலஸ்தீன வட்டார அதிபர் மஹ்மூட் அபாஸ் (Mahmoud Abbas) எகிப்தில் நடக்கவிருக்கும் அமைதி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மாநாடு யூத சமய விடுமுறை தொடங்குவதற்குச் சற்று முன்னதாக நடப்பதால் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அதில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் அவரும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்