Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் குரங்கம்மைத் தொற்றுடன் தொடர்புடைய முதல் மரணம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் குரங்கம்மைத் தொற்றுடன்  தொடர்புடைய முதல் மரணம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபருக்குக் கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடு இருந்ததாகக் கூறப்பட்டது.

அவர் எப்படிக் குரங்கம்மைத் தொற்றால் மாண்டார் என்பதை நிர்ணயிக்க விசாரணை நடைபெறுவதாக டெக்சஸ் மாநில அதிகாரிகள் கூறினர்.

குரங்கம்மைத் தொற்றால் மரணம் ஏற்படுவது சாத்தியம்; ஆனால் மிகவும் அரிது என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்களில் பணிபுரியும் ஜெனிஃபர் மெக்குவிஸ்டன் (Jennifer McQuiston) கூறினார்.

அமெரிக்காவில் இதுவரை 18,100 குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்குப் புதிதாக நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை சற்று மெதுவடைந்துள்ளது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்