ஆஸ்திரேலிய ஆற்றில் மாண்டுகிடந்த மில்லியன் கணக்கான மீன்கள்
வாசிப்புநேரம் -

(படம்: GRAEME MCCRABB)
ஆஸ்திரேலியாவில் ஓர் ஆற்றில் மில்லியன் கணக்கான மீன்கள் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மெனிண்டீ என்ற நகரில் உள்ள டார்லிங்-பாக்கா என்ற ஆற்றில் சம்பவம் நடந்தது என்று BBC செய்தி நிறுவனம் சொன்னது.
அங்கு வீசும் வெப்ப அலையால் ஆற்றில் இருந்த மீன்கள் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.
மெனிண்டீயில் இவ்வளவு மீன்கள் ஒரே நேரத்தில் மாண்டது இதுவே முதல்முறை என்று உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர்.
மாண்டுகிடக்கும் மீன்கள் அழுகும் நாற்றத்தால் நகர மக்கள் அவதியுறுவதாக BBC சொன்னது.
அந்த ஆற்று நீரை அவர்கள் குளிப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துவது உண்டு.
ஆனால் இப்போது அவர்களால் ஆற்று நீரை அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது.