Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அஸர்பைஜான் விமானம் ஏன் விழுந்தது? பதிவுப்பெட்டி ஆராயப்படுகிறது

வாசிப்புநேரம் -
அஸர்பைஜான் விமானம் ஏன் விழுந்தது?  பதிவுப்பெட்டி ஆராயப்படுகிறது

(கோப்புப் படம்: REUTERS/Azamat Sarsenbayev)

கஸக்ஸ்தானில் விபத்துக்குள்ளான அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் பதிவுப்பெட்டிகள் பிரேசிலுக்கு அனுப்பப்படுகின்றன.

அந்தப் பெட்டிகள் பிரேசலில் தயாரிக்கப்பட்டவை.

குரல் பதிவுப்பெட்டியிலும் தகவல் பதிவுப்பெட்டியிலும் உள்ள தரவுகள் பிரேசிலுள்ள ஆய்வுக்கூடத்தில் ஆராயப்படும்.

தரவுகளை ஆராயும் வேலையை நேரில் கண்காணிக்க கஸக்ஸ்தான், ரஷ்யா, அஸர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் செல்வர்.

பிறகு தரவுகள் கஸக்ஸ்தான் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

டிசம்பர் 25ஆம் தேதி அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

அதிலிருந்த 67 பேரில் 38 பேர் மாண்டனர்.

அதனால் சில விமான நிறுவனங்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் பயணங்களை ரத்துச் செய்துள்ளன.

மார்ச் மாத இறுதிவரை மாஸ்கோவுக்கான (Moscow) விமானப் பயணங்களை ரத்துச் செய்வதாக இஸ்ரேலின் El Al நிறுவனம் நேற்று (30 டிசம்பர்) அறிவித்தது.

ரஷ்யா குற்றவியல் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

விமானத்தைத் தவறுதலாகச் சுட்டு விபத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அஸர்பைஜான் அதிபர் ரஷ்யாவிடம் வலியுறுத்துகிறார்.

விமானம் தென் ரஷ்யாவின் செச்னியா (Chechnya)வட்டாரத்தில் உள்ள குரோஸ்னி (Grozny) நகரில் தரையிறங்கத் திட்டமிட்டது.

ஆனால் போகும் வழியிலேயே கஸக்ஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) துயரச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் ரஷ்யா பொறுப்பேற்கவில்லை.

உக்ரேனிடம் இருந்து ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் ரஷ்யாவின் தற்காப்பு ஏவுகணைகள் அந்த நேரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஏவுகணை தவறுதலாக விமானத்தைச் சுட்டுவிட்டதா என்பது தெரியவில்லை.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்