இந்தோனேசியா பாலித் தீவில் எரிமலை வெடித்தது - விமானப் பயணங்கள் ரத்து
வாசிப்புநேரம் -
(படம்: AFP/Arnold Welianto)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவின் பாலித் தீவிலிருந்து புறப்படவிருந்த குறைந்தது 7 அனைத்துலக விமானங்களின் பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 6 விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவேண்டியவை. மற்றொன்று கோலாலம்பூருக்குப் புறப்படவிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவின் கிழக்கிலுள்ள எரிமலை வெடித்து அதிலிருந்து கிளம்பிய கரும்புகை வானில் 8 கிலோமீட்டர் தூரத்துக்குப் படர்ந்திருக்கிறது.
தாய்லந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கான சில விமானப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1,703 மீட்டர் உயரங்கொண்ட Lewotobi Laki-Laki எரிமலை Flores எனும் சுற்றுலாத்தீவில் அமைந்துள்ளது. இரட்டை உச்சிகளைக் கொண்ட அந்த எரிமலையில் வெடிப்பு நேற்றிரவு (20 மார்ச்) 11 நிமிடங்கள் 9 விநாடிகளுக்கு நீடித்தது.
அருகிலுள்ள கிராமங்களுக்குப் பாதிப்பில்லை.
கடும் மழை பெய்வதால் எரிமலைக் குழம்பு வெள்ளமாக வழிந்தோட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2024) நவம்பரில் இந்த எரிமலை பலமுறை வெடித்ததில் 9 பேர் மாண்டனர். விமானப் பயணச் சேவைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆதாரம் : AFP