“வெள்ளம் வருகிறது!” - 900 உயிர்களைக் காப்பாற்றிய பள்ளி முதல்வர்
வாசிப்புநேரம் -
படம்: Lucie GODEAU / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
“வெள்ளம் வருகிறது... வெள்ளம் வருகிறது!”
அந்த எச்சரிக்கை கிடைத்ததும் ராஜேந்திரா தாவடி (Rajendra Dawadi) தயங்கவில்லை.
பள்ளியிலிருந்த சுமார் 900 மாணவர்களையும் உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 26 காலை நேப்பாளத்தின் திரிசூலி பஜார் (Trishuli Bazaar) உயர்நிலைப் பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.
எச்சரிக்கை வந்தவுடன் திரு தாவடியும் ஆசிரியர்களும் உடனடியாகச் செயல்பட்டனர்.
மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து உயரமான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளிக்கு வந்துகொண்டிருந்த பேருந்துகளும் திருப்பி அனுப்பப்பட்டன.
சில நிமிடங்களில் அவர்கள் அஞ்சியது நடந்தது.
பல ஆண்டுகளாகத் திரு தாவடி நடத்திவந்த பள்ளி சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இடிந்து விழுந்தது.
“தகவல் தவறாக இருந்தால் ஒருநாள் படிப்புதான் பாதிக்கப்படும். உண்மையாக இருந்தால் உயிர்களை இழந்திருப்போம்,” என்றார் அவர்.
அந்த விரைவான முடிவு சுமார் 900 உயிர்களைக் காப்பாற்றியது.
இருப்பினும் பள்ளிக்கு வெளியே ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். ஓர் ஆசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்தனர்.
இப்போது திரு தாவடிக்கு பள்ளியும் இல்லை, பள்ளி இருந்த நிலமும் இல்லை.
தம்மை அவர் இப்படித்தான் விவரிக்கிறார்: “பள்ளி இல்லாத ஒரு முதல்வர்.”

ஆதாரம் : AFP