Skip to main content
மலேசிய வெள்ளம்: "2014ஆம் ஆண்டைக் காட்டிலும் இம்முறை மோசம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசிய வெள்ளம்: "2014ஆம் ஆண்டைக் காட்டிலும் இம்முறை மோசம்"

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 122,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பெரும்பாலானவை வடக்கில் உள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் இம்முறை அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014இல் 118,000 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்.

அண்மைய வெள்ளத்தில் கிளந்தான், திரங்கானு, சரவாக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர்.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் கிளந்தான் என்று தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 122,631 பேரில் 63 விழுக்காட்டினர் கிளந்தான்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்