பங்களாதேஷ் வெள்ளம் - மில்லியன் பேர் தத்தளிப்பு
Syed Amir Hosain Masum / AFP
This audio is generated by an AI tool.
பங்களாதேஷில் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் 44 பேர் மாண்டனர்.
சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழையால் சுமார் ஒரு மில்லியன் பேர் சிக்கிக்கொண்டனர்.
அவர்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
இடுப்பு அளவில் உயர்ந்துள்ள நீரில் அவர்கள் நடமாட வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி சென்று சேர்க்க அதிகாரிகள் விரைந்து செயல்படுகின்றனர்.
மின்சாரத் தடை, சேதமடைந்த சாலைகள் முதலியவற்றால் மீட்பு, நிவாரண முயற்சிகளில் சிக்கல்.
ஒதுக்குப்புறப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு உதவியைக் கொண்டுச் சேர்க்க ராணுவமும் கடற்படையும் படகுகளைப் பயன்படுத்துகின்றன.