Skip to main content
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம் - மாண்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்வு

வாசிப்புநேரம் -
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம் - மாண்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்வு

(படம்: Carlos Fabal / AFP)

பிரேசிலின் தெற்கேயுள்ள Rio Grance de Sul மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் மாண்டோர் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 70,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

74 பேர் காயமடைந்துள்ளனர்; 67 பேரைக் காணவில்லை என்று பொதுத் தற்காப்புப் பிரிவு கூறியது.

மாநிலத்தில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த Porto Alegre நகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நகரில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

இடுப்பளவு வெள்ளத்திலிருந்து மக்களை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். 4 சக்கர வாகனங்களும் jet ski சாதனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மில்லியன்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி அவதியுறுகின்றனர். அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை விவரிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகருக்கான இருவழிப் பேருந்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் நகரிலிருந்து வெளியேற மக்கள் பேருந்துக்காக வரிசைபிடித்துக் காத்திருக்கின்றனர்.

Porto Alegre அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்