Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இணைந்தார் புளோரிடா ஆளுநர் ரோன் டிசான்ட்டிஸ்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் புளோரிடா (Florida) ஆளுநர் ரோன் டிசான்ட்டிஸ் (Ron DeSantis) அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முயலும் திரு. டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) அது பெரும் சவாலாய் அமையும்.

Twitter நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க்குடன் (Elon Musk) இணையத்தில் நேரடியாக உரையாடுவதற்கு முன், 44 வயது திரு. டிசான்ட்டிஸ் வேட்பாளருக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

தம்முடைய செயல்பாடுகளும் பாரம்பரியப் பண்புகளும் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று திரு. டிசான்ட்டிஸ் நம்புகிறார்.

நோய்ப்பரவல் காலத்தில் புளோரிடாவைத் திறமையாய் நிர்வகித்த அவர், சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும் திரு. டிரம்புக்கும் திரு. டிசான்ட்டிஸுக்கும் சுமார் 40 விழுக்காட்டுப் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட அன்றாடம் சமூக ஊடகம் வழியே திரு. டிசான்ட்டிஸைச் சாடுகிறார் திரு. டிரம்ப்.

"Ron DeSanctus" என்ற பெயரில் அவரைக் குறிப்பிடும் திரு.டிரம்ப், திரு. டிசான்ட்டிஸுக்கு "ஆளுமை மாற்று அறுவைச் சிகிச்சை" தேவை என்கிறார். குடியரசுக் கட்சியின் நியமனத்துக்காகத் தம்மை எதிர்க்கும் அவர் விசுவாசமற்றவர் என்று திரு. டிரம்ப் குறைகூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்