Skip to main content
4 பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்குச் சென்ற தாய் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

4 பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்குச் சென்ற தாய் கைது

வாசிப்புநேரம் -
4 பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்குச் சென்ற தாய் கைது

படம்: Osceola County Sheriff's Office

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் 4 பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்காக வெளியூர் சென்ற தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஐரீன் மில்லர் (Irene Miller) லாஸ் வேகஸ் (Las Vegas) நகருக்கு வேலைக்காகச் சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு விமானத்தில் திரும்பியபோது காவல்துறையினர் அவரை விமான நிலையத்திலேயே கைதுசெய்தனர்.

எப்படிப் பிடிபட்டார்?

அக்டோபர் 21ஆம் தேதி இரவு 8.30 மணிக்குப் பிறகு வீட்டிலிருந்த சிறுமி ஒருவர் அவசர உதவிக்கு அழைத்தார்.

9 வயதுச் சகோதரனின் தலையில் உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் எடைக்கல் (dumbbell) விழுந்ததாகச் சிறுமி சொன்னார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டில் பெரியவரின்றி நான்கு பிள்ளைகள் இருப்பதை உணர்ந்தனர்.

பிள்ளைகள் 9 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

காவல்துறையினர் 9 வயதுச் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஐரீனைத் தொடர்புகொண்டனர்.

அப்போது அவர், வேலைக்காக லாஸ் வேகஸ் சென்றிருப்பதாகவும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரை வேலைக்கு எடுத்ததாகவும் கூறினார்.

அக்டோபர் 18ஆம் தேதி புறப்பட்ட அவர், 23ஆம் தேதி திரும்பத் திட்டமிட்டதாகக் காவல்துறையிடம் சொன்னார்.

அக்டோபர் 23ஆம் தேதி புளோரிடா திரும்பிய ஐரீன், விமானத்திலிருந்து இறங்கியதும் கைதுசெய்யப்பட்டார்.

பிள்ளைகளைப் புறக்கணித்ததாக அவர்மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் கைதுசெய்யப்பட்ட காட்சி காவல்துறையினரின் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்