Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'உணவு தயாராக 3.5 நிமிடங்கள் போதவில்லை'- நிறுவனத்தின் மீது $5 மில்லியன் வழக்குத் தொடுத்திருக்கும் மாது

வாசிப்புநேரம் -
'உணவு தயாராக 3.5 நிமிடங்கள் போதவில்லை'- நிறுவனத்தின் மீது $5 மில்லியன் வழக்குத் தொடுத்திருக்கும் மாது

(Getty Images)

திடீர் உணவு வகை ஒன்றைத் தயாராக்க மூன்றரை நிமிடங்கள் போதவில்லை என்று மாது ஒருவர் Kraft நிறுவனத்தின் மீது 5 மில்லியன் டாலர் வழக்குத் தொடுத்துள்ளார்.

Velveeta’s mac and cheese எனும் உணவு வகையை "தயார் செய்து சாப்பிட 3.5 நிமிடங்களே ஆகும்" என்று உணவின் பொட்டலத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதற்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார். அதை CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உணவைத் தயார்செய்வதற்கு, பொட்டலத்தின் மூடியை அகற்றவேண்டும்... தண்ணீர் சேர்க்கவேண்டும்...கலக்கவேண்டும்...நுண்ணலை அடுப்பில் வைக்கவேண்டும்....

மூன்றரை நிமிடங்கள் அதற்குப் போதாது என்று பெண்ணின் வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர்.

பொய்யான விளம்பரம் வழி நிறுவனம் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் Kraft Heinz Foods நிறுவனமோ வழக்கு முற்றிலும் பயனற்றது, குற்றச்சாட்டை வலுவாக எதிர்க்கத் தயார் என்று கூறியதாக CNN குறிப்பிட்டது.
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்