Flydubai இந்திய விமானியுடன் பேசிய இஸ்ரேலியப் பிரதமர்
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: MENAHEM KAHANA/Pool via REUTERS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) Flydubai விமானத்தில் சக விமானியால் தாக்கப்பட்ட இந்திய விமானியுடன் பேசியிருக்கிறார்.
தாக்குதல் சம்பவத்தை விமானி பிரதமரிடம் விவரித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
தொலைபேசியில் உரையாடிய திரு நெட்டன்யாஹு இந்திய விமானி ஸ்மித் மச்சரின் (Smit Machchar) துணிச்சலைப் பாராட்டினார்.
டெல் அவிவ் சென்றுகொண்டிருந்த விமானத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த விமானி மக்களின் அலறல் கேட்டதைப் பிரதமரிடம் நினைவுகூர்ந்தார்.
இயன்றதைச் செய்து கதவைத் திறந்தபோது மக்கள் உதவக் காத்திருந்ததாக அவர் சொன்னார்.
விமானி அறையில் நெருக்கடியின்போது பயன்படுத்துவதற்கான கோடரியால் மச்சார் தாக்கப்பட்டதாய் புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.
சக விமானியைத் தாக்கியவர் ஒமானைச் சேர்ந்தவர் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டன.
இதற்கு முன்னர் விமானத்தைச் செலுத்த அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
அவரை வேலைக்குச் சேர்ப்பதற்கு முன் வழக்கமான பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.
எனினும் தீவிரவாதச் சித்தாந்தத்துக்கான அறிகுறிகள் விரிவாக ஆராயப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
விமானிக்குரிய பாதுகாப்புச் சோதனை குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

ஆதாரம் : Others