Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"ஆகாயத் திமிங்கிலம்" - அஞ்சல்காரராக மாறக்கூடும்

வாசிப்புநேரம் -
பளபளப்பான வெள்ளைநிற வயிறு... ஆகாயத்தில் பறந்து செல்லும் உடம்பு... கீழிருக்கும் வனத்தில் படும் அதன் நிழல்...

பெரிய உருவத்தைத் தவிர, "ஆகாயத் திமிங்கிலத்துக்கும்" உண்மையான திமிங்கிலத்துக்கும் சம்பந்தமே இல்லை என்கிறது Flying Whales என்ற பிரெஞ்சு விமான நிறுவனம்.

ஹீலியம் வாயுவால் மிதக்கும் ஆகாய விநியோக வாகனமே ஆகாயத் திமிங்கிலம். அது மின்சக்தியில் செயல்படுகிறது.

"ஆகாயத் திமிங்கிலம்" செல்லமுடியாத இடங்களுக்கும் சென்று விநியோகம் செய்யும் என்கிறது Flying Whale.

குறைந்த கரியமிலவாயு வெளியேற்றம், தரையில் ஒதுங்கவேண்டியது இல்லை, பறக்கும்போதே விநியோகம் செய்யமுடியும்... என்று ஆகாயத் திமிங்கிலத்தின் சிறப்பு அம்சங்களை நிறுவனம் பட்டியலிட்டது.

அத்தகைய சிறப்பு அம்சங்களால் ஆகாயத் திமிங்கிலம் உலகெங்கிலும் விநியோகப் பிரச்சினைகளுக்கு நீடித்த நிலையான தீர்வாக அமையலாம் என்று நம்பப்படுகிறது.
 
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்