Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உலகளவில் உணவு நெருக்கடிக்குக் காரணம் ரஷ்யா": ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம்

வாசிப்புநேரம் -

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம் உலக உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. 

உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததால் மக்கள் பஞ்சத்தை எதிர்நோக்கக்கூடும் என்று மன்றம் தெரிவித்தது. உக்ரேன் ஐரோப்பாவின் பெரும்பாலான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. 

உக்ரேனும் ரஷ்யாவும் உலகளவில்:

  • கோதுமை ஏற்றுமதியில் 30 விழுக்காடு பங்கு வகிக்கின்றன
  • ஏற்றுமதியாகும் சோளத்தில் 20 விழுக்காடு பங்கு வகிக்கின்றன
  • சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் 75 விழுக்காடு பங்கு வகிக்கின்றன

உக்ரேன்மீது போர் தொடுக்கப்பட்டதால் உலகளவில் உணவுப் பாதுகாப்புப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்தப் போரைத் தொடங்கியதாகவும் அவரால்தான் இதை நிறுத்தமுடியும் என்றும் மன்றச் சந்திப்பில் சுட்டப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்