Skip to main content
சர்ச்சையில் சிக்கிய எம்பாப்பே
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சர்ச்சையில் சிக்கிய எம்பாப்பே - மன்னிப்புக் கேட்டார்

வாசிப்புநேரம் -
சர்ச்சையில் சிக்கிய எம்பாப்பே - மன்னிப்புக் கேட்டார்

Jade GAO / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 28 Oct 2026 11:08AM புதுப்பிப்பு : 28 Oct 2026 12:34PM

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரெஞ்சுக் காற்பந்து நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் சீனாவின் முன்னாள் தலைவர் மாவ் ஸிடொங்கைச் (Mao Zedong) சர்வாதிகாரி என்று அழைத்தார்.

சீனா அதற்குக் கண்டனம் தெரிவித்தது.

3 பெரிய சீன நிறுவனங்கள் எம்பாப்பேயுடன் இருந்த தொடர்புகளைத் துண்டித்தன.

சீன அரசாங்க ஊடக நிறுவனம் அவர் பங்கேற்ற காற்பந்து ஆட்டங்களின் ஒளிபரப்பை நிறுத்தியது.

எம்பாப்பேயின் விளம்பரங்களையும் நீக்கியது.

எம்பாப்பே மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சீனக் காற்பந்து அமைப்பு வலியுறுத்தியது.

அவர் தம்முடைய விருப்பமான பகடிப் படம் (meme) பற்றிக் கூறும் சமூக ஊடகக் காணொளியால் சர்ச்சை தொடங்கியது.

பகடிப் படத்தில் சர்வாதிகாரி ஒருவர் இடம்பெறுவார் என்று எம்பாப்பே சொல்கிறார்.

பகடிப் படத்தில் தெரிவது திரு மாவ் ஸிடொங்.

எம்பாப்பேயின்  முகம் சீனத் தலைவர் படத்தில் பொருத்தப்பட்டதுபோல் பகடிப் படம் தோன்றுகிறது.

சீன மக்களையும் சீன வரலாற்றையும் மதிப்பதாக எம்பாப்பே சொன்னார்.

தமது கருத்துகளுக்கு மன்னிப்பும் கேட்டார்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்