Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

கோல் அடித்த மகிழ்ச்சியில் சுரங்கப்பாதையில் விழுந்த பிரேசில் ஆட்டக்காரர்

வாசிப்புநேரம் -
கோல் அடித்த மகிழ்ச்சியில் சுரங்கப்பாதையில் விழுந்த பிரேசில் ஆட்டக்காரர்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காற்பந்தாட்டத்தில்...

கோல் போட்டவுடன்...

எல்லையற்ற மகிழ்ச்சியில்...

எல்லை தாண்டி குதித்துவிட்டார் ஓர் ஆட்டக்காரர்.

பிரேசில் காற்பந்தாட்டப் போட்டியில் கொரிதிபா (Coritiba)அணியும் ஷாபெகோவென்சா (Chapecoense) அணியும் களமிறங்கின.

கொரிதிபா (Coritiba) அணித் தலைவர் ஜேசி மாராநியௌ (Jacy Maranhao) தமது அணிக்கு ஒரு கோலை அடித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் திடல் எல்லையின் மறுபக்கம் குதித்தார்.

மறுபக்கத்தில், காற்பந்து வீரர்கள் உடைமாற்றும் அறைகளுக்குச் செல்லும் சுரங்கப்பாதை ஒன்று இருந்தது.

ஆனந்தத்தில் திளைத்திருந்த ஜேசி அதை கவனிக்காமல் நேராக அந்த சுரங்கப்பாதைக்குள் குதித்துவிட்டார்.

அவர் சுரங்கப்பாதையின் படிக்கட்டு வழியாக நொண்டி நொண்டி நடந்து வருவது காணொளி காட்சிகளில் தெரிந்தது.

வலியைப் பொருட்படுத்தாமல் தமது அணியுடன் தொடர்ந்து கொண்டாடுவதையும் காணமுடிந்தது.

நல்லவேளையாக அவர் லேசான காயங்களுடன் தப்பித்தார்.

ஆனால், அவரின் கொண்டாட்டம் நிலைக்கவில்லை.

இறுதியில் அவர் அடித்த கோல் 'offside' என்று தீர்மானிக்கப்பட்டது.

அதனால் அந்த கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இருப்பினும் அவரது அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஷாபெகோவென்சா அணியை வீழ்த்தியது.

"நான் குதித்தபோது...ஏதோ கனவில் விழுவதுபோலவே இருந்தது," என்றார் ஜெசி.

2014ஆம் ஆண்டில் இவரைப் போலவே இன்னோர் ஆட்டக்காரரும் சுரங்கப்பாதைக்குள் விழுந்திருக்கிறார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்