Skip to main content
ஆஸ்திரேலியாவில் அதிசயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

ஆஸ்திரேலியாவில் அதிசயம் - தொலைந்த பணப்பை அப்படியே கிடைத்தது

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் அதிசயம் -  தொலைந்த பணப்பை அப்படியே கிடைத்தது
வெளியீடு : 22 Mar 2026 05:13PM புதுப்பிப்பு : 22 Mar 2026 05:26PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவில் தொலைந்த பணப்பை அப்படியே கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தை இந்தியப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். Instagramஇல் @ooopsallgirls என்ற பெயரில் அவர் அதனை விவரித்தார். தமது தோழி ரயில் நிலையத்திலேயே பணப்பையை மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும் அதனை எடுக்க மீண்டும் அதே இடத்துக்குச் சென்றதாகவும் அவர் கூறினார். அவர்கள் எங்கே பணப்பையை விட்டுச் சென்றார்களோ, அதே இடத்தில் அது அப்படியே இருந்தது. இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்றும் அவர் கூறினார். “ஒருமுறை, தோழியின் தொலைபேசியை ஓர் இடத்தில் தவறுதலாக விட்டுவிட்டுச் சென்றேன். சிறிது நேரம் கழித்தே அதை உணர்ந்தேன். பயத்துடன் ஓடிச் சென்று பார்த்தோம். அது அங்கேயே இருந்தது. ஆஸ்திரேலியாவில் வாழ்வது ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது,” என்று அவர் நெகிழ்ந்தார். இந்தக் காணொளிக்கு இணையவாசிகள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். “சமூகப் பொறுப்பு என்பது இதுதான். தங்களுக்குச் சொந்தமில்லாத பொருள்களை மக்கள் மதிக்கிறார்கள்" என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்